Language:

The Free and Open Productivity Suite
Apache OpenOffice 4.1.6 released


பிழைகளைத் தெரிவித்தல்

மென்பொருள் அறிஞர்கள் அல்லாதோரும் Openoffice.org மென்பொருளை மேம்படுத்தலாம். உதாரணமாக பிழைகளை, மேம்படுத்துனர்களின் குறைகளையும் தெரிவிக்கலாம். பெரும்பாலும் உங்களது அறிக்கைகள் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்படும். எவ்வளவு பிழைகள் கலையப்பட்டன என்பது கருதப்படத்தக்க ஒரு அம்சமாகும்.

Openoffice.orgக்கான பிழைப்பதிவு (Bug tracking) முறையான Issuezilla ஆங்கிலத்தில் உள்ளது. எனவே அம்மொழியின் அறிவு கொஞ்சம் தேவை. இருந்தாலும் மொழி என்பது நீங்கள் குறிப்பினைப் பதிவதற்குத் தடையாய் இராது.

இங்கே Issue என்று பிழை என்பதைக் குறிக்கிறோம். நீங்கள் Openoffice.orgஐப் பயன்படுத்துகையிலோ மதிப்பிடுகையிலோ ஏற்படும் பிரச்சினைகள், மென்பொருள் பிழை அல்லது மென்பொருளின் முடிவடையா தன்மையினாலோ ஏற்பட்டது என்று நிங்கள் கருதினால் நீங்கள் "commit an issue" செய்யலாம்.

இதனைச் செய்வதற்குத் தாங்கள் Openoffice.org திட்டத்தின் ஒரு உறுப்பினராகப் பதிவு செய்திருத்தல் அவசியம். பதிவுசெய்ய உங்கள் மின்னஞ்சல் முகவரி தவிற பெரிதாய் ஏதும் தேவைப்படாது. அதுவும் உங்களது கோரிக்கையில் நிலை பற்றி ("தீர்க்கப்பட்டது", பெரும்பாலும்) தெரியப்படுத்தவே. பிறகு நீங்கள் தளத்தினுள் நுழைந்திருக்க வேண்டும். உங்கள் மேலோடி (browser) தரவுமுடிகளை(cookies) ஏற்றுக்கொள்ளும் திறமை படைத்ததா என்பதைக் குறிப்பாகப் பார்த்துக் கொள்ளவும்.

நீங்கள் பதிவுசெய்திருக்கும் பிழையை ஏற்கனவே மற்றொரு பயனாளர் பதிவு செய்திருக்க வாய்ப்புகள் நிறையவே உண்டு. எனவே Issuezillaன் தேடல்பக்கத்திலிருந்து தொடங்குதல் சாலச்சிறந்தது. இது சிக்கலானதாகவா தோன்றுகிறது? அதிர்ஷ்டவசமாக நீங்கள் ஒரு சிலவற்றை மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கும். பெரும்பாலும் நான் "STATUS"க்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் தெரிவு செய்வேன். ("UNCONFIRMED"ஐச் சொடுக்கியபின், shift keyஐ அழுத்தியவாறே "CLOSED" என்பதையும் சொடுக்குதல்) ஒரு கட்டமைப்பில் தீர்க்கப்பட்டு இன்னும் வெளிவராமல் இருக்கும் அம்சங்களையும் இதனால் என்னால் தெரிந்துகொள்ள இயலும். பிறகு நீங்கள் "Summary" அல்லது "A description entry"ல், உங்கள் பிரச்சினையை சில (ஆங்கில!) சொற்களால் விளக்குங்கள்."submit" ஐத் தட்டி தேடலின் முடிவைப் பெறுங்கள். அந்தப்பட்டியலில் எந்த ஒரு பிழையும் தரப்படாதபோது "Enter New Issue"ஐத் தட்டி உங்கள் விவகாரத்தைப் பதிவு செய்யலாம்.

தற்போது உங்களுடைய பிழைக்குறிப்பை உள்ளிடலாம். மேம்படுத்துநர்களுக்கு உதவும் வகையில் முடிந்த வரையில் விளக்கமானக் குறிப்புகளை அளிக்கவும். எப்படி பிழை ஏற்பட்டது? அதனை நிவர்த்தி செய்ய ஏதேனும் செய்தீர்களா பொன்ற விபரங்களைத் தெரிவிக்கவும். தயவுசெய்து பிழைகளைப் பதியும் முன்னர் Issue Writing Guidelinesப் படியுங்கள்! இதன் மூலம் பிழைப்பதிவு பக்கத்தின் வெவ்வேறு கட்டங்களின் விளக்கங்களைத் தருகின்றது.

பின்வருவதைச் சொல்லிவிட்டு முடிக்க நினைக்கிறேன். நீங்கள் Openofficeன் தமிழ்மொழி கட்டமைப்பினைப் பயன்படுத்தினால், பிரச்சினைகளை ஆங்கிலத்தில் பதிவு செய்ய சிரமப்படலாம், ஏனென்றால் அந்ததந்த மெனுக்கள், உரையாடல்பெட்டிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதற்காக விரிதாள் வடிவில் உள்ள (in Spreadsheet Format-sdc)பன்மொழி OpenOffice.org அகராதி ஐப் பார்க்கவும் (இதையும் பார்க்கவும்). {குறிப்பு: நம் மொழி தமிழ் இந்த அகராதியில் இல்லாமல் போகலாம். அதற்குப் பதிலாக மற்றொன்றைத் தொடர்புகொள்ள வேண்டி வரலாம்.} நீங்கள் Openoffice.orgன் விரிதாள் பிரிவில் உங்கள் சொல்லுக்கான சரியான ஆங்கிலச் சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்.

தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர் 

 

 
தமிழ்-ஓப்பன்ஆபீஸ்
அறிமுகம்
மென்பொருள்
விளக்கம்
பதிவிறக்கங்கள்
குறுந்தட்டில் மென்பொருள்
சொல்திருத்தி
திட்டம்
பின்புலம்
FAQ
உதவி  பெறுவது
மடற்குழுக்கள்
ஆவணங்கள்
பங்களித்தல்
எப்படி பங்களிப்பது?
பிழைகளை தெரியப்படுத்துவது
தொடர்புக்கு
மடற்குழுக்கள்
முகவரிகள்
மற்றவை
நன்றிக்குரியவர்கள்
உரிமம்

Apache Software Foundation

Copyright & License | Privacy | Contact Us | Donate | Thanks

Apache and the Apache feather logo are trademarks of The Apache Software Foundation. OpenOffice, OpenOffice.org and the seagull logo are registered trademarks of The Apache Software Foundation. Other names appearing on the site may be trademarks of their respective owners.